Sunday, January 8, 2012

தமிழ் நாட்டிலே புஸ்தகப் பிரசுரம்


தமிழ் நாட்டிலே புஸ்தகம் எழுதுவோரின் நிலைமை இன்னும் சீராகவில்லை. பிரசுரத் தொழிலை ஒரு வியாபாரமாக நடத்தும் முதலாளிகள் வெளிப்படவில்லை யாதலால், சங்கடம் நீங்காமலிருக்கிறது. புதிய புஸ்தங்களைப்படித்துப் படித்து ‘பயன்படுமா படாதா’ வென்று தீர்மானம் செய்ய வேண்டும். ‘நன்றாகவிலையாகுமா விலையாகாதா’ என்பதை ஊகித்தறிய வேண்டும். ஆசிரியரிடமிருந்து புஸ்தகத்தை முன் விலையாகவோ, வேறுவித உடன்பாடாகவோ, வாங்கிக் கொண்டு தாம் கைம்முதல் போட்டு அச்சிட்டு லாபம் பெற வேண்டும். இந்த வியாபாரத்தை நமது தேச முதலாளிகள் தக்கபடி கவனியாமலிருப்பது வியப்பை உண்டாக்குகிறது. புஸ்தகங்கள் வெளிவரத்தான் செய்கின்றன. பெருந்தொகையான ஜனங்கள் வாங்கிப் படிக்கத்தான் செய்கிறார்கள். ஒரு ஒழுங்கான பிரசுர வியாபாரம் நடந்தால் ஜனங்களுக்கு நல்ல  புஸ்தகங்கள் கிடைக்கும். இப்போது அச்சிடப் பணமுள்ளவர் எழுதும் புஸ்தகங்களே பொது ஜனங்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பழைய புஸ்தகங்களிலே ஆச்சரியமானவை பல எழுதப்பட்ட காலத்தில், ஆசிரியர் தனவந்தராக இருந்ததில்லை. மேன்மேலும் ஊக்கத்துடன் நடத்தினால், பிரசுர வியாபாரத்தில் நிறைய லாபம் உண்டாகுமென்பதில் சந்தேகமில்லை.

5 comments:

  1. இன்றைய தமிழ் சூழலில் பிரசுரக்கர்த்தாக்கள் புஸ்தகாசிரியனின் மேல் லாவலேசமும் அக்கறையில்லாமல் இஷ்டப்படி வேலை செய்வதை ஒரே பத்தியில் படம் பிடித்து காட்டி விட்டீர்கள். நன்றி, தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. நீங்கள் பாரதியாரிடம் பேசிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

    எனிவே, அவர் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடும். நன்றிகள்.

    ReplyDelete
  3. எங்க ட்விட்டர்ல காணோம் தலைவரே...What happened?

    - NattAnu

    ReplyDelete
  4. ட்விட்டருக்கு sabbatical லீவு பாஸ்!

    ReplyDelete