Thursday, April 29, 2010

செளமியா - பாரதியார் பாடல்கள்

செளமியா அவர்கள் பாடிய பாரதியார் பாடல்கள்.

1. பூலோக மாரி
2. சின்னஞ்சிறு கிளியே
3. காலா உன்னை
4. காணி நிலம்
5. முன்னை இலங்கை
6. முருகா முருகா
7. ஓய்! திலகரே
8. பாருக்குள்ளே நல்ல நாடு
9. சொல்லவல்லாயோ கிளியே
10.தேடி உன்னை
11. திருவைப் பணிந்து
12. வாழிய செந்தமிழ்
13. வெடி படும் அண்டத் (ஊழிக்கூத்து)
14. வீர சுதந்திரம்
15. விடுதலை
16. வில்லினையொத்த

இதைப் பதிவேற்றியவருக்கு நன்றி.
இங்கு பதிவிறக்கம் செய்யலாம்:

Tuesday, April 27, 2010

எம்.எஸ்.சுப்புலட்சுமி



எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய பாரதியார் பாடல்களின் தொகுப்பு இதோ.

அமைதியான ஆழமான குரலிலும் பாரதியார் பாடல்கள் இனிமைதான்.


1. விநாயகர் நான்மணிமாலை
2. எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா?
3. காலமாம் வனத்தில்
4. செந்தமிழ் நாடென்னும் போதினிலே
5. வாழிய செந்தமிழ்
6. வந்தே மாதரம் (புதிய மொழிபெயர்ப்பு)
7. வில்லினை யொத்த புருவம் வளர்த்த
8. பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்

இதைப் பதிவேற்றியவருக்கு நன்றி.
இங்கு பதிவிறக்கம் செய்யலாம்:

Saturday, April 24, 2010

ஆசை முகம் மறந்து போச்சே




ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ (ஆசை)

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம் (ஆசை)

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி (ஆசை)

கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி (ஆசை)

Sunday, April 4, 2010

அன்பில் சிறந்த தவமில்லை

அன்பில் சிறந்த தவமில்லை என்ற தலைப்பில் திரு.கிருஷ்ண ஜெகன்னாதன், பாரதியார் பற்றி ஆற்றிய உரை.

பதிவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்

Size: 27.4 MB | Duration: 1:59:45
http://dl.dropbox.com/u/4570429/10_Krishna%20Jagananthan.mp3

Thursday, April 1, 2010

காணி நிலம் வேண்டும்


உன்னிக்கிருஷ்ணன் அருமையாக பாடியுள்ளார்.


காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்
அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்
அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்
பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்
நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்
அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்
என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்
அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்
என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்
சொற்பொருள்:

காணி நிலம்: 1.32 acers