Saturday, September 19, 2009

பழகிய பாரதி - எஸ். ராமகிருஷ்ணன்

பாரதியாரை நேரில் கண்டவர்கள் எவராவது இருப்பார்களா என்று பலவருடம் தேடியலைந்திருக்கிறேன். எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடும் பாண்டிச்சேரியில் உள்ள பாரதி நினைவகமும் போகும் போதெல்லாம் அவரைச் சந்தித்த மனிதர்களில் ஒருவரையாவது பார்க்க முடியுமா என்ற ஆதங்கம் உருவாகும். பாரதியாரை தன்னுடைய பள்ளிவயதில் பார்த்துப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற முதியவரைப் பற்றி அறிந்த போது உடனே காண வேண்டும் என்ற வேட்கை உருவானது.


முழுவதும் படிக்க...
http://www.sramakrishnan.com/?p=354

Wednesday, September 16, 2009

சின்னஞ் சிறு கிளியே - நித்யஸ்ரீ மகாதேவன்

நித்யஸ்ரீ மகாதேவன் குரலில் கண்ணம்மா பாட்டு. இவ்வீடியோவில் மழையை பற்றி பாரதியார் பாடிய திக்குகள் எட்டும் சிதறி  என்னும் பாடலும் உள்ளது.

சின்னஞ் சிறு கிளியே - சுதா ரகுநாதன்

சுதா ரகுநாதனின் குரலில் கண்ணம்மா பாட்டு.

Sunday, September 13, 2009

கண்ணம்மா என் குழந்தை

சின்னஞ்சிறு கிளியே பாடல் அனைவருக்கும் பிடித்த பாடல். அதன் இசை வடிவம், இதோ. டி.ஆர். மகாலிங்கம் அவர்களின் புல்லாங்குழலின் இனிமையை அனுபவியுங்கள்.

Saturday, September 12, 2009

பாரதி - கண்ணதாசன்

ஞானப் புலவன் நல்லா சிரியன்
ஈனச் சாதிகள் இடுப்பை ஒடித்தவன்
கானப் பெருங்குயில் கற்பனைச் சிகரம்
ஆயிரம் ஆண்டின் அதிசயமாக
ஒருமுறை பிறக்கும் உயர்ந்த பிறப்பு
சொல்லச் சொல்லச் சுவைமிகும் பெயரை
எண்ண எண்ண இனித்திடும் பெயரை
பிறந்தநாள் கண்டு பேசி மகிழ்கிறோம்
இறந்த நாள் கண்டு நாம் எண்ணி யழுகிறோம்
காலத்தாலவன் கல்வெட் டாயினான்
கன்னித் தமிழ் அவன் காவலில் வாழ்ந்தது
அன்புத் தமிழே அன்னை பாரதமே
இன்பக் கவிஞனை எண்ணுவாய் நிதமே!

பாரதியார் படித்த பள்ளி

The characteristic turban peeps out from behind a row of pavement shops. Get a little closer and you see the trademark moustache, and you realise that in that busy commercial area of Tirunelveli, you are looking at a statue of Subramania Bharati. To the right of the statue is the entrance to the M.D.T. Hindu High School that not only donated land for the statue, but also has the distinction of being the alma mater of the poet from 1894-97.

முழுவதும் படிக்க: http://www.hindu.com/fr/2009/09/11/stories/2009091150500300.htm

Thursday, September 10, 2009

Tuesday, September 8, 2009

மனதில் உறுதி வேண்டும்



மிகச் சிறப்பக இசையமைக்கப்பட்ட பாரதியின் பாடல்களின் இதுவும் ஒன்று.