Thursday, September 6, 2012

அமெரிக்காவுக்குப் போன சீன ராஜகுமாரன்

சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள் உங்கள் சீன தேசத்தில் கலியாணமாகும் வரை மணப்பெண் தனது "புருஷன் முகத்தை பார்ப்பது வழக்கமில்லையாமே" மெய்தானா? என்று கேட்டாள்.

அதற்கு அந்த ராஜகுமாரன் உங்கள் தேசத்தில சில பெண்கள் கலியாணமான பிறகு தனது புருஷன் முகத்தை பார்ப்பது இல்லை யென்று கேள்விப்படுகிறேன், அது மெய்தானா? என்றான்.

1 comment:

  1. முறுக்கு மீசையும் முண்டாசுமாய், பக்தியும் காதலும் ததும்பும்போதுகூட ஒரு கோபம் இழையோடவே கவிதையெழுதியதாய் நாம் உருவகித்துக்கொள்ளும் பாரதிக்கு நல்ல நகைச்சுவை உணர்வும் இருந்ததற்கு இது சான்று.

    ReplyDelete