17 செப்டம்பர் 1906, பராபவ புரட்டாசி 2 அருளா லெவையும் பார் என்றான் அதை அறியாதே சுட்டியென் அறிவாலே பார்த்தேன் இருளான பொருள்கண்ட தல்லால் -- கண்ட என்னையுங் கண்டிலே னென்னடி தோழி! - தாயுமானவர் |
ஆயிரங் கோடி அறிஞர்கள் பற்பல ஆயிர யுகங்க ளாராய்ந் தறிகிலா ‘யான்’ உடை யியற்கை யானோ அறிவன்! மீனுணர்ந் திடுங்கொல் வியன்கடற் பெருமை? அருள்வழிக் காண்கென் றருளினர் பெரியோர்; மருள்வழி யல்லான் மற்றொன் றுணர்கிலேன்! அகிலமும் ‘யான்’ என ஆன்றோரிசைப்பர் மகிதலத் திருளின் மண்டிய மனத்தேன் யானதை யொரோவழிக் கண்டுளேன்; அதனினும் மானத ஒளியது மங்குமோர் கணத்தே யானெனும் பொருள்தான் என்னைக்கொல்? அதனையிவ் வூனெனக்கொள்வ ருயிரிலார் சிலரே. பிரமமே யானெனப் பேசுவர் பேசுக! பிரமமே யானெனப் பேசினர் பெரியோர். |
Thursday, February 2, 2012
யான்
Subscribe to:
Post Comments (Atom)
அற்புதமான பாடல்.'நான் யார்?'என்ற பாரதியின் ஆன்மீகத் தேடலின் விளைவுதான் இந்தப் பாடல் என்று நினைக்கிறேன்.
ReplyDelete’நானெனும் பொய்யை நடத்துவோன் நான்’னு ஒரு இடத்துல எழுதியிருக்கார்.
Deleteஅதையும் பதிகிறேன். நன்றி.
Itharkana arththam ???
Delete