Sunday, October 14, 2012

அருவி

ஓரிரண்டு மகான்கள் அத் தளைகளை அறுத்தே தொலைத்து விடுகிறார்கள். ஸ்திரியாகிய நான் முத்தமிடுவதற்கும், பாட்டு கேட்பதற்குமே தகுதியென்று உனக்கு அடிக்கடி தோன்றவும், இப்படி ஓர் பெருந் துறவி போல வார்த்தைகள் சொல்வதைக் கேட்டு நீ இப்பொழுது உன் மனத்திலுள்ளே பெருவியப்பு அடைகின்றாய். எங்கள் நாட்டினருக்கு அறிவுத் தெளிவு ஸகஜமாகையால் இந்த விஷயங்கள் எங்களுக்கு சுலபமாகப் புத்தியில் பட்டு விடும். ஆனால், அனுபவத்தில் வருவது கஷ்டம். அதற்கு மானுட ஜன்மம் வேண்டும்" என்றாள். எனக்கு இவள் இப்படியெல்லாம் பேசுவதுகூட வியப்பாகத் தோன்றவில்லை. இவ்வளவு பேசுவதுடன் என் மன மாறுபாடுகளை யெல்லாம் நிமிஷந்தோறும் அறிந்து விடும் இந்தக் கிராதகி, பேச்சு முடிந்தவுடன் ஒன்றும் அறியாத மான்கன்று போல விழிப்பது தான் வியப்பாயிருந்தது.

"கள்ளி, கள்ளி" என்று முணுமுணுத்தேன். "ஒரு தரம் சிக்ஷை விதித்துவிடு" என்று கெஞ்சினள்; அதாவது பழைய இதழ்ச்சிக்ஷை. "நீ என் காதலியன்று, நீ பெரிய ரிஷிக் கிழவர்" என்றேன். "எல்லாம் ஒன்று போலவேதான்! போ" எள்றாள்.

அப்பால் இதழோடு இதழ் பொருந்திப் பல நிமிஷங்கள் உயிர் கலந்திருந்தோம்.

No comments:

Post a Comment