வேதபுரத்தில் கலியுக கடோற்கசன் என்பதாக ஒருவன் கிளம்பி யிருக்கிறான். பழைய துவாபர யுகத்துக் கடோற் கசனுடைய சரித்திரம் எல்லாருக்கும் தெரியும். அரக்கு மாளிகையிலிருந்து பாண்டவர் தப்பி ஓடும்போது இடும்பவனத்தில் தங்கினார்கள். அங்கிருந்த இடும்பாசுரன் என்ற ராக்ஷஸன் அவர்களைப் பிடித்துத் தின்ன வந்தான். அந்த இடும்பனை வீமன் கொன்று விட்டான். பிறகு அவன் தங்கையாகிய இடும்பி என்ற ராக்ஷஸி வீமன் மேல் காதல் கொண்டு தன்னை மணந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினாள். மற்ற சகோதரர் நால்வரும் பிரமசாரிகளாக இருக்கையில் தான் முதலாவது ஒரு ராக்ஷஸியைப் போய்க் கலியாணம் பண்ணிக் கொள்வதில் வீமனுக்குச் சம்மதமில்லை. இடும்பி குந்தியிடம் போய் முறையிட்டழுதாள். குந்தி வீமனை நோக்கி: "மகனே, ஒரு ஸ்திரீ வந்து காதல் கூறுமிடத்து அவளை மறுப்பது க்ஷத்திரிய தர்மமில்லை. ஆண் மக்கள் அங்ஙனம் செய்யலாகாது. ஆதலால், நீ இந்த ராக்ஷஸியைக் கல்யாணம் பண்ணிக் கொள்க" என்று கட்டளையிட்டாள். தாய் சொல்லுக்கிணங்கி வீமன் இடும்பியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டான். இவ்விருவருக்கும் பிறந்த பிள்ளையே துவாபரயுக கடோற்கசன். இவன் வீமனுக்குச் சமமான பலமும் பராக்கிரமும் உடையவனென்று வேதவியாசர் தெரிவிக்கிறார். இது நிற்க. நமது கலியுக கடோற்கசனைக் கவனிப்போம். இவன் வேதபுரத்தில் ஒரு சாராயக் கடையிலே பணவசூல் குமஸ்தாவாக இருக்கும் ராமசாமி நாயக்கர் என்பவருடைய மகன். இவனுக்கு இப்போது வயது சுமார் இருபது இருக்கலாம். சாராயக் கடையில் பிராந்தி, விஸ்கி, ஜின் முதலிய ஐரோப்பியச் சாராயங்கள் விற்கிறார்கள். வேதபுரத்தில் குடி மும்முரம். ஆனபடியால் மேற்படி கடைக்குப் பற்று வரவு ஜாஸ்தி. அங்குப் பண வசூல்காரனாகிய ராமசாமி நாயக்கருக்கு மாதம் எட்டு ரூபாய் சம்பளம்.
தெலுங்கு பேசும் நாயக்கர். நல்ல க்ஷத்திரிய வம்சம். தெலுங்கு ராஜ்யம் போன பிறகு கெட்டுப் போய்த் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கும் நாயுடு கூட்டத்தைச் சேர்ந்தவர்.
மேற்படி ராமசாமி நாயக்கர் மகனுக்குத் தாய் தந்தையர் வைத்த பெயர் கோவிந்தராஜுலு. அவன் தானாக வைத்துக் கொண்ட பெயர் கலியுக கடோற்கசன்.
அவன் உயரம் ஐந்தேகால் அடியிருக்கலாம். குண்டுருளை போலே வயிரமான உடம்பு. இவன் மேலே மோட்டார்வண்டி ஓட்டலாம். மாட்டு வண்டி விடலாம். இவன் தலை ரோமத்தில் முந்நூறு ராத்தல் கல் தொங்க விடலாம். இவன் தலையிலே நாற்பது பேரடங்கிய பெரிய தொட்டிலை நிறுத்தி வைக்கலாம். இவன் இரண்டு விரல்களைக் கொண்டு மகா பாரதப் புஸ்தகத்தைக் கிழித்துப் போடுவான். இவன் பல்லினால் கல்லைப் பேர்த்துப் போடுவான். இவன் நகத்தால் கதவைப் பிளப்பான்.
வயது இருபதுக்கு மேல் ஆகவுமில்லை. நேற்றுக் காலையில் இந்தப் பையன் என்னைப் பார்க்கும் பொருட்டாக வந்திருந்தான். முதலாவது, தன்னுடைய தொழில்களை எல்லாம் என் வீட்டில் செய்து காட்டினான். நான் மிகவும் ஆச்சரியப் பட்டேன்.
பிறகு இவனுடைய புத்தி எந்த நிலைமையில் இருக்கிறதென்பதைப் பரிசோதனை செய்யும் பொருட்டாக அவனுடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்து பார்த்தேன். அவன் கையில் ஒரு குறிப்புப் புஸ்தகம் (பாக்கெட் நோட்புக்) வைத்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தால் சின்ன பைபிலோ அல்லது டைரி (தினசரி)யோ என்று ஐயப்படும்படியாக இருந்தது. "கையில் என்ன; டைரி புஸ்தகமா?" என்று கேட்டேன். அந்தப் பையன் ஹீ என்று பல்லைக் காட்டிக் கொண்டு, "இல்லெங்க; மந்திரவாதப் புஸ்தகங்கள்" என்றான்.
நான் வாசிக்கலாமா? என்று கேட்டேன். வாசிக்கலாம் என்று சொல்லி அந்த புஸ்தகத்தை என் கையில் கொடுத்தான். அது அச்சிட்ட புஸ்தகமன்று. அவன் கையால் எழுதியது. பல ஊர்களிலே சஞ்சாரம் பண்ணினேன். பல சாதுக்களிடம் கேட்ட மந்திரங்களை யெல்லாம் இதில் எழுதி வைத்திருக்கிறேன். நான் அவர்களுக்கு (அந்த சாதுக்களுக்கு) பத்திரம் தயார் பண்ணிக் கொடுப்பேன் என்று கலியுக கடோற்கசன் சொன்னான். பத்திரமா? அதென்ன? என்று கேட்டேன்.
அவன் சொல்லுகிறான், அதைப் பாமர ஜனங்கள் கஞ்சா இலை என்று சொல்லுவார்கள். சாதுக்களுக்கு மனதை ஒருநிலையில் நிறுத்திப் பிரம்மத்திலே கொண்டு சேர்க்க அது உபயோகங்க. மைசூரில் நான் போன மாசம் போயிருந்தேனுங்க. அங்கே பெரிய சாமியாருங்க. அவர் தான் எனக்கு ஆஞ்சநேயர் மந்திரம் கற்றுக் கொடுத்தாருங்க. அவர் ஒரு நாளைக்கு ஒன்றரை ரூபாய் கஞ்சா வாங்கி புகை குடிப்பாருங்க. அவர் மனதை உள்ளே கொண்டு நிறுத்தினால் பிறகு வெளியே இழுப்பது கஷ்டங்க என்றான்.
இவன் இப்படி சொல்லிக் கொண்டிருக்கையில் எனக்கு அந்தப் புஸ்தகத்தைப் பார்க்கவேண்டும் என்ற அவா அதிகப்பட்டது. புஸ்தகத்தைக் கையிலெடுத்துத் திறந்தபோது அதிலிருந்து பொலபொலவென்று இருபது முப்பது துண்டு காகிதங்கள் உதிர்ந்தன. எனக்கு ஆராயச்சியிலே பிரியம் அதிகமானபடியால் முதலாவது அந்த துண்டு காயிதங்களை பரிசோதனை செய்து பார்த்துவிட்டுப் பிறகு புஸ்த்தகத்துக்குள்ளே நுழைவோம் என்று யோசித்து அந்த காயிதங்களைப் பார்த்தேன்.
அவற்றின் விவரம் பின்வருமாறு
முதலாவது- ஹோம் ரூல் ஸ்டாம்ப் மூன்று இருந்தது.
அதில் ஒவ்வொரு ஸ்டாம்புக்கு நடுவிலும் அனிபெஸன்ட் அம்மாள் தலை போட்டிருக்கிறது. சுற்றி தெய்வத்திற்காகவும், தேசத்திற்காகவும்., ராஜாவிற்காகவும் சிறைப்பட்டவர் என்றெழுதியிருந்தது. அதை சூழ நான்கு புறத்திலும் இங்கிலீஷ்,, தெலுங்கு, உர்து, நாகரி, கன்னட லிபிகளில் ஹோம்ரூல் என்றெழுதியிருந்தது.
இரண்டாவது- ஒரு சின்ன டிக்கட். அதில் இங்கிலீஷ் பாஷையில் மிஸ் தாரா இண்டியன் லேடி ஸாண்டோ என்று ஒரு புறத்திலும் வெளிச்சீட்டு (ஓளட்பாஸ்) என்று மற்றொரு புறத்திலும் போட்டிருந்தது.
மூன்றாவது - ஒரு லேசான காகிதத்தை போன்ற செப்புத் தகடு. அதில் ஏதோ சக்கரம் செதுக்கும் பொருட்டு வைத்துக் கொண்டிருப்பதாக கடோற்கசன் சொன்னான்.
நாலாவது - ராமமூர்த்தி சர்க்கஸ் ஆட்ட ஜாப்தா.
ஐந்தாவது - ஒரு கிறிஸ்தவப் பையனுடைய நேர்த்தியான புகைப்படம். அவன் யாரென்று கேட்டதற்குத் தன்னுடைய சினேகிதனென்றும், இரும்பாலையில் வேலை பார்க்கிறானென்றும், அவனுக்கு கலியுக கும்பகர்ணன் என்று பெயர் வைக்கலாமென்றும் கடோற்கசன் சொன்னான்.
ஆறாவது - மறுபடியும் ஒரு டிக்கட். அதில் இங்கிலீஷில் எடிசன் கினேமாடோக்ராப் கம்பெனி ஒரு ஆளை உள்ளே விடு. என்றெழூதியிருந்தது.
ஏழாவது - ஸிகரெட் பெட்டியிலிருந்தெடுத்த துர்கை படம். அதில் தேவி மகிஷாசுரனைக் கொல்லுகிறாள். பக்கத்தில் விநாயகருடைய தலை மாத்திரம் தெரிகிறது. உடம்பெல்லாம் மறைந்திருக்கிறது. சின்ன சுப்பிரமணியன் ஒன்றிருக்கிறது. அம்மனுக்கு பதினாறு கைகள் போடுவதற்குப் பதிலாக எட்டுக்கை போட்டிருந்தது.
எட்டாவது - இரண்டு சிங்கங்களுடன் ஒரு மனிதன் சண்டை போடுவது போல ஒரு படம்.. பத்திரிக்கையிலிருந்து கத்தரித்தது.
ஒன்பதாவது - யேசுகிறிஸ்து மாட்டுக் கொட்டகையில் பிறந்து வைக்கோல் மேலே போடடுக் கிடப்பதாகக் குழந்தையுருவங் காட்டிய படம்.
பத்தாவது - சாதரண வருஷத்து மார்கழி மாதம் 18 ஆம் தேதி முதல் விரோதி கிருது வருஷத்துச் சித்திரை மாதம் 16 ஆம் தேதி வரையில் ஏகாதசி, ஷஷ்டி, பிரதோஷம், கரிநாள், யமகண்டம், ராகுகாலம், குளிகைகாலம், வாரசூலை இவற்றின் அட்டவணை.
பதினோரவது - இனி மேன்மேலும் அடுக்கிகொண்டு போனால் படிப்பவர்களுக்குப் பொறுமையில்லாது போய்விடும் என்ற அச்சத்தால் இங்கு மேற்படி கீழே யுதிர்ந்த துண்டு காயிதங்களைப் பற்றிய முழு விவரங்களை தெரிவிக்காமல் விடுகிறேன். அதில் அநேகம் கடோற்கசனுடைய சிநேகிதர்களுடைய மேல் விலாசம், ஒரு சிறு காகிதத்தில் குங்குமம் சுற்றியிருந்தது. அது கோயிலில் கொடுத்ததென்றும், அம்மன் பிரஸாத மென்றும் கடோற்கசன் விளக்கினான்.
இனி அவன் மந்திரவாதப் புஸ்தகத்துள் எழுதியிருந்த விநோதங்களில் சிலவற்றை இங்குக் காட்டுகிறேன்.

No comments:
Post a Comment