தராசு சொல்லலாயிற்று:-
“ஸ்ரீமான் காந்தி நல்ல மனுஷர்.
”அவர் சொல்லுகிற ஸ்த்ய விரதம், அஹிம்ஸை, உடமை மறுத்தல், பயமின்மை இந்த நான்கும் உத்தம தர்மங்கள் - இவற்றை எல்லோரும் இயன்றவரை பழக வேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனைத் திருப்பி அடிக்கக் கூடாதென்று சொல்லுதல் பிழை.
"சுதேசியம் ஜாதிஸமத்வம், தேசபாஷைப் பயிற்சி, தெய்வ பக்தி இந்த நான்கையும் இன்றைக்கே பழகி சாதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நமது தேசம் அழிந்துபோய்விடும்.
“நாக்கைக் கட்டுதல், பிரமசரியம் இவையிரண்டையும் செல்வர்கள் இடையிடையே அனுஷ்டித்தால் அவர்களுக்கு நன்மையுண்டாகும். ஏழைகளுக்கு இந்த உபதேசம் அவசியமில்லை. அவர்களுக்கு நாக்கை ஏற்கெனவே கட்டித்தான் வைத்திருக்கிறது. பிரமசரியத்தை ஜாதி முழுமைக்கும் ஸ்ரீகாந்தி தர்மமென்று உபதேசம் செய்யவில்லை. அது வேலை செய்தால் தேசத்தில் சீக்கிரம் மனிதரில்லாமல் போய்விடும்.
“காந்தி பதினோரு விரதம் சொன்னார். நான் பன்னிரெண்டாவது விரதமொன்று சொல்லுகிறேன். அது யாதெனில்:- எப்பாடு பட்டும் பொருள் தேடு; இவ்வுலகத்திலே உயர்ந்த நிலை பெறு; இப்பன்னிரெண்டாவது விரதத்தை தேச முழுதும் அனுஷ்டிக்க வேண்டும்.”

No comments:
Post a Comment