Saturday, April 21, 2012

ஸரஸ்வதி பூஜை – உண்மை வழி


சொல்லை ஸாதாரணமாக நினைத்துவிட லாகாது. உண்மைச் சொல் ஷேம மந்திரமாகும். பொய்ச்சொல் அழித்துவிடும். “வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணி பூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்.”

இவளை அறிஞன் தனக்குள்ளே ஞான வெள்ளமாகக் காண்கிறான். அவனுடைய  அறிவு கதிர் விடுகின்றது. அவனுடைய அறிவு கதிர் விடுகின்றது. இவளுடைய பூஜைக்கு முக்கிய வழிகள் எவை? தான் எப்போதும் எவ்விடத்திலும் உண்மை சொல்லுதல், பிறர் உண்மை சொல்வதை எப்போதும் எவ்விடத்திலும் விருப்பத்தோடு கேட்டல் என்ற இவ்விரண்டுமேயாம். தான் உண்மை சொல்வது மிகவும் சிரமமாய் விட்டது. பிறர் உண்மை சொல்வதைக் கேட்கும்போது நாராசவாணமாய்விட்டது.  ஸாதாரண நிலையில், மனித வாழ்க்கை அத்தனை கோணலாகி விட்டது; மனித அறிவு அவ்வளவு குழப்பமடைந்து நிற்கின்றது.

தேவ வாக்கு அவதாரம்: ஸரஸ்வதி

வேதa மார்க்கமாகிய வேள்வியின் ரஹஸ்யப் பொருளை உணர்ந்து நடந்தால், உண்மை சொல்வதிலும் துன்பமிராது; கேட்பதிலும் துன்பமிராது. உலக வாழ்க்கையே தேவருக்குச் செய்யப்படும் வேள்வியல்லவா? அதனை ஸரஸ்வதியே தரிக்க வேண்டு மென்று மதுச்சந்தரிஷி வேண்டுவதை மேலே கண்டோம். உண்மைச் சொல்லே ஸரஸ்வதி வசம் நமது வேள்வியை ஒப்புக் கொடுப்பதற்கு முக்கிய வழி யென்றோம். இதனுடன் நிந்தை, பழி, சாபம்,  பயம், அசுசி – இவற்றினால் வாக்கை மாசுபடுத்தா திருக்க வேண்டும். அமங்கல வார்த்தைகளும் அவச் சொற்களும், பய வசனங்களும் தீமை தரும். பரிபூர்ணமான தீரமும், வலிமையும், உண்மையும், திருத்தமும், தெளிவும் பொருந்திய வாக்கே தேவ வாக்கென்று சொல்லப்படும். மனித ஜாதிக்கு தேவ வாக்குப் பிறந்திடுக.

ஸரஸ்வதியும் இலக்கியமும்

உலக நடையிலே, உண்மை முதலிய குணங்கள் ஸரஸ்வதி தேவியின் கருணைக்கு நம்மைப் பாத்திரமாக்கி, நம்மிடத்தில் தேவ வாக்கைத் தோற்றுவித்து, நமது வேள்வியைக் காக்கும் என்பது கண்டோம். இலக்கியக்காரருக்கோ வென்றால், இத்தெய்வமே குலதெய்வம். அவர் இதனைச் சுடர் செய்யும் உண்மையுடனே போற்ற வேண்டும். எதுகை மோனைகளுக்காகச் சொல்ல வந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் ஸரஸ்வதி கடாக்ஷத்தை இழந்துவிடுவான். யமகம் திரிபு முதலிய சித்திரக் கட்டுக்களை விரும்பிச் சொல்லுக்குத் தக்கபடி பொருளைத் திரித்துக் கொண்டு போகும் கயிறு பின்னிப் புலவன் வாணியின் திருமேனியை நோகும்படி செய்கிறான். அவசியமில்லாத அடைமொழிகள் கோப்போன் அந்த தெய்வத்தின் மீது புழுதியைச் சொரிகின்றான். உலகத்தாருக்குப் பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய்வோன் அந்த சக்தியைக் கரித்துணியாலே மூடுகின்றான். ‘வெள்ளைக்கலை’யுடுத்துவதில்லை. மனமறிந்த உண்மைக்கு மாறு சொல்லும் சாஸ்திரக்காரனும் பாட்டுக்காரனும் ஸரஸ்வதிக்கு நிகரில்லாத பழக்கம் செய்கின்றனர். இலக்கியத்துக்குத் தெளிவும் உண்மையுமே உயிரெனலாம். இவ்வுயிருடைய வாக்கே அருள் வாக்கென்று சொல்லப்படும்.

No comments:

Post a Comment