Saturday, September 12, 2009

பாரதி - கண்ணதாசன்

ஞானப் புலவன் நல்லா சிரியன்
ஈனச் சாதிகள் இடுப்பை ஒடித்தவன்
கானப் பெருங்குயில் கற்பனைச் சிகரம்
ஆயிரம் ஆண்டின் அதிசயமாக
ஒருமுறை பிறக்கும் உயர்ந்த பிறப்பு
சொல்லச் சொல்லச் சுவைமிகும் பெயரை
எண்ண எண்ண இனித்திடும் பெயரை
பிறந்தநாள் கண்டு பேசி மகிழ்கிறோம்
இறந்த நாள் கண்டு நாம் எண்ணி யழுகிறோம்
காலத்தாலவன் கல்வெட் டாயினான்
கன்னித் தமிழ் அவன் காவலில் வாழ்ந்தது
அன்புத் தமிழே அன்னை பாரதமே
இன்பக் கவிஞனை எண்ணுவாய் நிதமே!

No comments:

Post a Comment